கொரோனா தடுப்பு பணிக்கு உணவு பொருட்கள் வழங்க முன்வரலாம் என்று சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று நோய் தடுப்பணிகளுக்காக தன்னார்வ தொண்டு அமைப்புகள் பொருட்கள் சேகரிக்கப்படுகின்றன. சென்னை மாநகராட்சியுடன் இணைந்து இந்த பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம்.
சமுதாயக்கூடங்கள், காப்பகங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள ஆதரவற்றோர்களுக்கு அரிசி, பருப்பு, சமையல் எண்ணை மற்றும் முக கவசம், கிருமி நாசினி, சோப்பு போன்ற பொருட்களை வழங்கலாம். இதனை கீழ்ப்பாக்கம் ஜெ.ஜெ. உள்விளையாட்டு அரங்கம், அண்ணா நகர் அம்மா அரங்கத்திலும் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நன்கொடை வழங்க விருப்பமுள்ளவர்கள் கமிஷனர், கிரேட்டர் சென்னை கார்ப்பரேசன் என்ற பெயரில் செலுத்துமாறு மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.