செய்திகள்
ஆள் இல்லா விமானம் (கோப்புப்படம்)

ஆள் இல்லா விமானம் மூலம் கிருமிநாசினி தெளிக்க முடிவு

Published On 2020-03-26 08:58 GMT   |   Update On 2020-03-26 08:58 GMT
பஸ் மற்றும் ரெயில் நிலையம், மார்க்கெட் போன்ற மக்கள் கூடும் பகுதியில் ஆள் இல்லா விமானம் மூலம் கிருமி நாசினி தெளிக்க முடிவு செய்யப்பட்டு சோதனை மூலம் மாநகராட்சி இன்று செயல்படுத்தியது.
சென்னை:

சென்னை மாநகராட்சியின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் 200 வார்டுகளிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் கிருமி நாசினி தெளிக்க பவர் பிரையர் உள்பட 500 எந்திரங்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அரசு அலுவலகங்கள் உள்பட பெரிய கட்டிடங்களில் அதிக சக்தியுடன் கூடிய 75 ஜெட்ராடிங் எந்திரங்கள் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகின்றன.

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் அத்தியாவசிய தேவைகளுக்காக பொது மக்கள் வந்து செல்லக்கூடிய பஸ் நிலையங்கள், மார்க்கெட் பகுதிகள் மற்றும் மக்கள் அடர்த்தியாக உள்ள குடிசை பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்க ஆள்இல்லா விமானம் (ட்ரோன்) எந்திரங்களை பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த எந்திரங்களை கொண்டு கிருமி நாசினி தெளிக்கும் பணிகள் இன்று சோதனை செய்யப்பட்டது.

ஒரு ட்ரோன் எந்திரத்திரன் மூலம் ஒரு நாளைக்கு 50 ஆயிரம் சதுரஅடி பரப்பளவுக்கு கிருமி நாசினிகளை தெளிக்க இயலும். இது போன்று அண்ணா பல்கலைக்கழகத்திடம் 4 ட்ரோன் எந்திரங்கள் உள்ளன என்று மாநகராட்சி கமி‌ஷனர் பிரகாஷ் தெரிவித்தார்.
Tags:    

Similar News