செய்திகள்
மரணம்

ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டவர் பலி

Published On 2020-03-26 04:28 GMT   |   Update On 2020-03-26 05:11 GMT
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட வாலிபர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
நாகர்கோவில்:

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் சிகிச்சை வார்டு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆஸ்பத்திரியில் இதுவரை 20-க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு அவர்களது ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது தெரிய வந்தது.

இதை தொடர்ந்து அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்த நிலையில் குளச்சல் கோடிமுனையைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இந்த ஆஸ்பத்திரியில் காய்ச்சல், சளி அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டார்.

அவரது ரத்தம் மாதிரி பரிசோதனைக்காக நெல்லைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை அந்த வாலிபர் இறந்து விட்டார். அவரது ரத்த பரிசோதனை முடிவு வந்த பிறகுதான் அவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதா? என்பது தெரிய வரும்.

பலியானவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து விட்டு சமீபத்தில்தான் குமரி மாவட்டம் வந்தார். உடல் நலக்குறைவு காரணமாக ஏற்கனவே தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதன் பிறகு தான் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பலியாகி விட்டார்.

தற்போது ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் வெளிநாட்டில் இருந்து வந்த 26 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Tags:    

Similar News