செய்திகள்
கொரோனா வைரஸ்

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தயவு செய்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும்- அதிகாரிகள் வேண்டுகோள்

Published On 2020-03-25 08:55 GMT   |   Update On 2020-03-25 08:55 GMT
வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தயவு செய்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என்று அதிகாரிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சென்னை:

தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு உள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படும் என்பதால் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி விமான நிலையங்களில் அனைத்து பயணிகளுக்கும் தீவிர பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தினர்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்களது விவரங்களை தெரிவிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி உள்ளது.

மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தயவு செய்து வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என அதிகாரிகள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்கள் விவரங்களை சுகாதாரத்துறையினருக்கு தெரிவித்தால் தான் அவர்களின் நலன் மட்டும் அல்லாது அருகில் உள்ளவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களின் நலனையும் பாதுகாக்க முடியும் என்பதை அடிப்படையாகக் கொண்டு மருத்துவத் துறையினர் உரிய பரிசோதனைகளையும், ஆலோசனைகளையும் மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் கூறினர்.
Tags:    

Similar News