செய்திகள்
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி வாங்க திரண்ட கூட்டம்.

கோயம்பேடு சந்தையில் மக்கள் வெள்ளம்: 15 ரூபாய்க்கு விற்ற கத்திரிக்காய் 40 ரூபாய் உயர்வு

Published On 2020-03-24 10:15 GMT   |   Update On 2020-03-24 10:15 GMT
தமிழகத்தில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் கோயம்பேடு சந்தையில் 15 ரூபாய்க்கு விற்ற கத்திரிக்காய் 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னை:

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் அந்தியாவசிய பொருட்களை வாங்குவதில் மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி- பழங்கள் வாங்க மக்கள் அதிக அளவில் வருகிறார்கள்.

அங்குள்ள காய்கறி கடைகள், பழமார்க்கெட் பகுதிகளில் வழக்கத்தை விட இரு மடங்கு மக்கள் கூட்டம் காணப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை காய்கறி விலை 30 ரூபாய்க்குள் தான் இருந்தது.

ஆனால் இப்போது 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதால் காய்கறிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு விடும் என நினைத்து நிறைய பேர் மொத்தம் மொத்தமாக காய்கறிகளை வாங்கிச் செல்கின்றனர். இதனால் காய்கறி விலையை வியாபாரிகள் இரு மடங்கு உயர்த்தி விட்டனர்.

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோவுக்கு இன்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை விபரம் (ரூபாயில்):-

கோயம்பேடு மார்க் கெட்டில் ஒரு கிலோவுக்கு இன்று விற்கப்பட்ட காய்கறிகளின் விலை விப ரம் (ரூபாயில்):-

கத்திரிக்காய்- 40

தக்காளி- 40

வெண்டைக்காய்- 30

அவரைக்காய்- 60

பாகற்காய்- 50

புடலங்காய்-  20

பீன்ஸ்- 60

முள்ளங்கி- 40

சிறுகிழங்கு- 60

உருளை- 30

சேனை- 30

கோஸ்- 30

சவ்சவ்- 40

காராமணி- 40

வாழைப்பூ- 50

பச்சைபட்டாணி- 60

பழங்கள்

வாழைப்பழம்-பூவன்- 40

செவ்வாழை- 60

நேந்திரம்- 60

மோரீஸ்- 35

ஏலக்கி- 70

மலை வாழை- 120

கமலா ஆரஞ்சு- 80

ஆப்பிள்- 150

வாஷிடன் ஆப்பிள்- 200

காய்கறி - பழங்கள் விலை உயர்வு குறித்து வியாபாரி சுந்தர்ராஜன் கூறியதாவது:-

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 5 ஆயிரம் டன் காய்கறி வருவது வழக்கம் இன்று 5500 டன் அளவுக்கு காய்கறி வந்தது.

காய்கறிகள் அதிகமாக வந்தாலும் மக்கள் ஒருவித பதட்டத்துடன் மார்க்கெட்டுக்கு வந்து காய்கறிகளை வாங்கிக் செல்வதை காண முடிந்தது.

வெளிமாநிலம், வெளி மாவட்டங்களுக்கு வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் இனி வரும் நாட்களில் காய்கறி கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற அச்சத்தில் கூடுதலாகவே காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இதனால் சில கடைக்காரர்கள் விலையை ஏற்றி விட்டனர்.

15 ரூபாய்க்கு விற்ற கத்தரிக்காய் இப்போது 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதற்கு முன்பு 30 ரூபாய், 40 ரூபாய்க்குள் காய்கறி விலை கட்டுக்குள் இருந்தது. ஆனால் நேற்றும், இன்றும் காய்கறி விலை கிடுகிடு என உயர்ந்து கிலோ 50 ரூபாயை தாண்டி விட்டது.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்த காரணத்தால் காய்கறி விளைச்சல் அதிகமாகவே உள்ளது. அப்படி இருந்தும் பல இடங்ககளில் காய்கறி விலையை பலர் உயர்த்தி விற்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடு மட்டுமின்றி பெரம்பூர், அம்பத்தூர், அயனாவரம், திருவொற்றியூர், வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தி.நகர், திருவான்மியூர், வேளச்சேரி, மயிலாப்பூர், மாதவரம், செங்குன்றம், தாம்பரம், கூடுவாஞ்சேரி, மேடவாக்கம், உள்பட சென்னையின் பல இடங்களில் காய்கறி விலை ‘கிடுகிடு’ என உயர்ந்து விட்டது.

Tags:    

Similar News