செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு தடை கேட்டு வழக்கு

Published On 2020-03-09 09:49 GMT   |   Update On 2020-03-09 09:49 GMT
திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் நடைபெறும் போராட்டத்துக்கு தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கு உயர்நீதிமன்றத்தில் நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது.
சென்னை:

சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் பொதுநல மனுதாக்கல் செய்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-

இந்திய அரசியலமைப்புச் சட்டம் அமைதியான முறையில் போராட்டங்கள் நடத்த உரிமை வழங்கியுள்ளது. அதை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எந்தவொரு அனுமதியும் இல்லாமல் சில மணி நேரங்களில் ஏராளமானோர் கூடி, சாலை மறியலில் ஈடுபடுவது. சட்டம்-ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்துவது அபாயகரமானது.

இதனால், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி உள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 14-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முறையான போலீஸ் அனுமதியின்றி நடத்தப்படும் இந்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும். சட்டப்படி தடுக்க போலீசாருக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி கூறுகையில் “ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பான வழக்கு வருகிற புதன்கிழமை விசாரணைக்கு வர இருப்பதால், அந்த வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து விசாரிக்கப்படும்’ என்று உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News