செய்திகள்
மேட்டூர் அணை நீர்மட்டம் 105 அடியாக உள்ளதால் கடல்போல் காட்சி அளிக்கிறது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

Published On 2020-03-06 04:10 GMT   |   Update On 2020-03-06 05:14 GMT
மேட்டூர் அணையில் இருந்து இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று 105.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 105 அடியானது.
மேட்டூர்:

கர்நாடகாவில் உள்ள அணைகளில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கடந்த 1-ந்தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. அன்று காலை 183 கன அடியாக இருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து 3-ந்தேதி 1663 கன அடியானது.

பின்னர் நீர்வரத்து படிப்படியாக சரிந்து நேற்று 433 கன அடியானது. இன்று நீர்வரத்து மேலும் சரிந்து 182 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக மட்டும் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக 1000 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் தண்ணீர் தேவை மீண்டும் அதிகரித்தது. இதையடுத்து இன்று காலை முதல் தண்ணீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நேற்று 105.11 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 105 அடியானது. இனி வரும் நாட்களில் இதே நிலை நீடித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News