செய்திகள்
ராமதாஸ்

அன்பழகன் உடல்நிலையை விசாரித்த ராமதாஸ்

Published On 2020-03-02 05:55 GMT   |   Update On 2020-03-02 05:55 GMT
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகனின் உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.

சென்னை:

தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகனுக்கு கடந்த 24-ந்தேதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 8 நாட்களாக அன்பழகனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நேற்று இரவு அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சென்று அன்பழகனின் உடல் நிலை பற்றி டாக்டர்களிடம் கேட்டு அறிந்தார்.

பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி ஆகியோரும் ராமதாசுடன் சென்று அன்பழகனின் உடல் நிலையை கேட்டறிந்தனர்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “அன்பழகன் விரைவில் நலம் பெற வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

97 வயதாகும் அன்பழகன் கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.

வீட்டில் ஓய்வு எடுத்த நிலையில் கட்சி பணிகள் எதிலும் ஈடுபட முடியாமல் இருந்த நிலையில்தான் அன்பழகனின் உடல்நிலை கடந்த 24-ந் தேதி திடீரென மோசமானது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News