செய்திகள்
கறிக்கோழி

கொரோனா நோய் பீதி: நாமக்கல்லில் கறிக்கோழி விலை வீழ்ச்சி

Published On 2020-02-23 14:48 GMT   |   Update On 2020-02-23 14:48 GMT
கோழிப் பண்ணைகளில் கொரோனா வைரஸ் தாக்கியதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று நாமக்கல் கலெக்டர் மெகராஜி தெரிவித்துள்ளார்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டத்தில் ஏரராளமான கோழிப் பண்ணைகள் உள்ளன. இதன்மூலம் ஏராளமான கறிக்கோழிகளும், முட்டையும் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகம் மட்டுமல்லாது வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இதனால் நாமக்கல் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்களுக்கும் கறிக்கோழி வளர்ப்பு தொழில் வாழ்வாதாரமாக உள்ளது.

இந்த நிலையில் கோழிப் பண்ணைகளில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாகவும், இதனால் கறிக்கோழிகளை மக்கள் சாப்பிட வேண்டாம் என்றும் வாட்ஸ் - அப் குரூப்களில் கடந்த சில நாட்களாக தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் கறிக்கோழி விற்பனை குறைந்தது.

மேலும் கடந்த வாரம் ரூ. 140-க்கு விற்ற ஒரு கிலோ கறிக்கோழி தற்போது ரூ. 100 முதல் ரூ. 120 வரை விற்பனை ஆகிறது. மேலும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கோழிப் பண்ணையாளர்கள் பீதி அடைந்துள்ளனர்.

வாட்ஸ்-அப் பில் பரவிய தகவல் குறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு எங்கும் இல்லை. இதுகுறித்து சுகா தாரத்துறையினர் ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப் பண்ணைகளில் கோழிகளை கொரோனா வைரஸ் தாக்கியதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. அதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம். இதுபோன்ற செய்திகளை வாட்ஸ்-அப் குரூப்களில் யாரும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Tags:    

Similar News