செய்திகள்
சென்னை ஐகோர்ட்

பட்டினப்பாக்கம்-பெசன்ட்நகர் சாலையை சரி செய்ய வேண்டும்: ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2020-02-21 09:30 GMT   |   Update On 2020-02-21 09:31 GMT
பட்டினப்பாக்கத்திலிருந்து, பெசன்ட்நகர் வரை சேதமடைந்த சாலையை சரி செய்ய வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் மீன் வியாபாரிகளையும், அங்குள்ள நடைபாதை வியாபாரிகளையும் ஒழுங்குப்படுத்துவது தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சுரேஷ்குமார் ஆகியோரால் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு விசாரணையின்போது, சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேரில் ஆஜராகி கூறியதாவது:-

ரூ.27.04 கோடி செலவில், 900 தள்ளுவண்டி கடைகளை மாநகராட்சியே அமைத்து கொடுக்க இருப்பதாகவும், கலங்கரை விளக்கம் அருகில் ரூ. 66 லட்சம் செலவில் 300 தற்காலிக மீன் விற்பனை கடைகள் அமைக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்குகள், நீதிபதிகள் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.

அப்போது சென்னை மாநகராட்சி சார்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராஜகோபால் கூறியதாவது:-

லூப் ரோட்டில் உள்ள மீன் வியாபாரிகளுக்கு, கொடுக்கப்பட்ட மாற்று இடத்தில் மீன் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

ராணி மேரீ கல்லூரி அருகே இரண்டு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, ஒரு ஏக்கர் மார்க்கெட் அமைக்கவும், ஒரு ஏக்கர் பார்க்கிங் வசதிக்கும் ஒதுக்கப்படும். இந்த புதிய மார்க்கெட்டில், கடலுக்கு சென்று மீன்பிடித்து விற்பவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு கடைகள் ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடை மாற்றம் தொடர்பாக மீனவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்து மாறு உத்தரவிட்டனர்.

மேலும் அடையார் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பட்டினப்பாக்கத்திலிருந்து, பெசன்ட் நகர் வரை சேதமடைந்த சாலையையும், அங்கு பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் இருக்கும் மேம்பாலைத்தையும் சரி செய்ய வேண்டும்.

இந்த பகுதிகளை சரிபடுத்தி போக்குவரத்தை தொடங்குவது குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். விசாரணையை மார்ச் 18-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News