செய்திகள்
மூடப்படாத ஆழ்துளை கிணறு

மூடப்படாத ஆழ்துளை கிணறுகளால் ஆபத்து- நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2020-02-13 09:09 GMT   |   Update On 2020-02-13 09:09 GMT
ஊத்துக்கோட்டை அருகே மூடப்படாத ஆழ்துளை கிணறுகளை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டை அருகே உள்ள பேரண்டூர் ஊராட்சியில் சுமார் ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர்.

கடந்த கோடை காலத்தில் ஏற்கனவே இருந்த ஆழ்துளை கிணறுகள் வற்றி விட்டதால் சமீபத்தில் 3 புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டன.

இவற்றில் ஒன்று மட்டும் தற்போது செயல்பாட்டில் உள்ளது. மீதி உள்ள 2 கிணறுகள் பயன்படுத்தப்படாமல் உள்ளன.

இந்த 2 ஆழ்துளை கிணறுகளும் மூடப்படாமல் உள்ளது. குழந்தைகள் இந்த ஆழ்துளை கிணறுகள் அருகே சென்று விளையாடி வருகின்றனர்.

கடந்த ஆண்டு ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் இறந்து போன சம்பவம் அனைவரையும் உலுக்கியது.

அது போன்ற சம்பவம் நடைபெறாமல் தடுக்க அதிகாரிகள் ஆழ்துளை கிணறுகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News