செய்திகள்
பாமக வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்ட ராமதாஸ். அருகில் ஜிகே மணி,ஏகே மூர்த்தி,வக்கீல் பாலு-நிர்வாகிகள்

பா.ம.க. வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார் ராமதாஸ்

Published On 2020-02-11 09:47 GMT   |   Update On 2020-02-11 09:47 GMT
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நடப்பு ஆண்டிற்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.
சென்னை:

பா.ம.க. சார்பில் ஒவ் வொரு ஆண்டும் வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுகிறது.

இந்த ஆண்டு பா.ம.க. தயாரித்துள்ள வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது. பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இந்த ஆண்டுக்கான வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வக்கீல் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டுள்ள பா.ம.க. வேளாண் நிழல் நிதி நிலை அறிக்கை வேளாண்மை, தோட்டக்கலைத் துறையில் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* அடுத்த 5 ஆண்டுகளில் வேளாண்மை, தோட்டக்கலைத்துறையில் 50 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* பொறியியல் பட்டதாரிகள், வேளாண் பட்டதாரிகளை ஒருங்கிணைத்து கிராமப்புறங்களில் ஆலோசனை மையங்களை அமைத்தல். இதன் மூலம் வேளாண் தோட்டக்கலை பொருட்களை சந்தைப்படுத்தும் ஆலோசனைகளும், சேவைகளும் வழங்குதல்.

* தென்னை மரங்களில் இருந்து இறக்கப்படும் நீராபானத்தை பாதுகாப்பான முறையில் உறைகளில் அடைத்து சந்தைப்படுத்துதல்.

* கிராமப்புற சுய உதவி குழுக்கள் மூலம் ஆடுகள், கோழிகள், மீன்கள் விற்பனை செய்தல். இவற்றை சாலையோரம் நவீன உணவகங்கள் அமைத்து விற்பனை செய்தல்.

இவற்றின் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும்.

* வேளாண்மையை லாபம் ஈட்டும் தொழிலாக மாற்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்துதல். பயிர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குதல்.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டம் நாட்களை 150 ஆகவும், ஒரு நாள் ஊதியத்தை ரூ.275 ஆகவும் உயர்த்துதல்.

* காவிரி-கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றுதல்.

* ஒரு லட்சம் கோடி செலவில் 2020-21 முதல் 2023-24 வரை நீர் பாசன திட்டங்களை செயல்படுத்துதல்.

* புதிய நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுதல்.

* தடுப்பணைகள் கட்டுதல்.

* வங்கி கடன் தள்ளுபடி.

* புதிய சந்தை கொள்கை.

* வேளாண்துறை பணிகளை கவனிக்க 4 அமைச்சர்களை நியமித்தல்.

* அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் தோட்டக்கலை பொருட்களுக்கான பெரிய சந்தைகளை அமைத்தல்.

* தமிழ்நாட்டில் அடுத்த 5 ஆண்டுகளில் 300 கோடி மரங்கள் நடுதல்.

என்பன உள்பட 69 தலைப்புகளில் தமிழக அரசுக்கு 265 யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இவற்றை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது பா.ம.க.வின் விருப்பம். வேண்டுகோள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News