செய்திகள்
மு.க.ஸ்டாலின்

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசியல் சாசனத்தை மீறி விட்டார்- மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published On 2020-02-07 05:30 GMT   |   Update On 2020-02-07 05:30 GMT
சிறுவனை அழைத்து செருப்பு கழற்றச் சொன்ன விவகாரத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அரசியல் சாசனத்தை மீறி விட்டார் என்று மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை:

முதுமலையில் பழங்குடி மாணவரை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தனது செருப்பை கழற்றிவிடச் சொன்னது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கவனத்திற்கு இதனை கொண்டு வருகிறேன். அமைச்சர்கள் ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி இப்படி யாராக இருந்தாலும், அரசியல் சாசனத்தின்படி அவர்கள் எடுத்துக்கொண்ட உறுதிமொழியை மீறித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

அதன் உச்சக்கட்டமாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடியின மாணவரை அழைத்து தனது காலணிகளைக் கழற்றச் சொல்லி இருக்கிறார். நாட்டு மக்கள் அனைவரும் இதனைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News