செய்திகள்
எச்.ராஜா

ரஜினி கருத்துக்கு எச்.ராஜா ஆதரவு

Published On 2020-02-06 07:19 GMT   |   Update On 2020-02-06 07:19 GMT
நடிகர் ரஜினிகாந்த் சி.ஏ.ஏ. விவகாரத்தில் சரியான கருத்தை தெரிவித்திருக்கிறார் என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா கூறியுள்ளார்.
சென்னை:

நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பேட்டி அளித்தார்.

இது குறித்து பா.ஜனதா தேசிய செயலாளர் எச். ராஜா கூறியதாவது:-

நடிகர் ரஜினிகாந்த் சி.ஏ.ஏ. விவகாரத்தில் சரியான கருத்தை தெரிவித்திருக்கிறார்.

பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர், ஏதேனும் ஒரு குடிமகனுக்கு கூட குடியுரிமை பறிக்கப்பட போகிறது என்பதை சுட்டிக்காட்டுங்கள் பார்ப்போம் என்றும், எந்த குடிமகனுக்கும் குடியுரிமை பறிக்கப்படாது என்றும் கூறியுள்ளனர்.

சி.ஏ.ஏ. சட்டப்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் மத ரீதியாக வஞ்சிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை தரப்பட்டிருக்கிறது. யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பான வீடியோ பதிவை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள எச்.ராஜா, நண்பர் ரஜினிகாந்தின் கருத்து பாராட்டுக்குரியது என்று கூறியுள்ளார்.
Tags:    

Similar News