செய்திகள்
எச்.ராஜா பேசிய போது எடுத்த படம்.

ப.சிதம்பரம் தாக்கல் செய்த அனைத்து பட்ஜெட்டும் பூஜ்யம்- எச்.ராஜா குற்றச்சாட்டு

Published On 2020-02-03 05:24 GMT   |   Update On 2020-02-03 05:24 GMT
பொருளாதாரம் பற்றி ஒன்றும் அறியாதவர் ப. சிதம்பரம் என்றும் அவர் தாக்கல் செய்த அனைத்து பட்ஜெட்களும் பூஜ்யம் என்றும் எச்.ராஜா குற்றம்சாட்டியுள்ளார்.
மேட்டுப்பாளையம்:

மேட்டுப்பாளையத்தில் கோவை வடக்கு மாவட்ட பாரதிய ஜனதா சார்பில் மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பிரசாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது பொய் வழக்குப் பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீஸ் அதிகாரிகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் பஸ் நிலையம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச். ராஜா, கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் எச். ராஜா நிருபர்களிடம் கூறியதாவது-

ப.சிதம்பரம் ஒரு பூஜ்ஜியம். அவர் தாக்கல் செய்த பட்ஜெட் இந்த நாட்டில் ஏதாவது நன்மை செய்துள்ளதா? சிதம்பரம்பொருளாதாரம் படித்தவர் அல்ல. பி.எஸ்.சி., பி.எல் .படித்தவர். பொருளாதாரம் பற்றி அவர் ஒன்றும் அறியாதவர். அவர் முன்பு தாக்கல் செய்த அனைத்து பட்ஜெட்களும் பூஜ்யமாக மக்களுக்கு பயனில்லாததாகவே இருந்தது.

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட் குறித்து ப.சிதம்பரம் விமர்சனங்களை பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. பாளையங்கோட்டையில் உள்ள ஒரு தனியார் பள்ளி மாணவி அதன் ஆசிரியர் இழிவாக பேசியதால் தற்கொலை செய்துள்ளார். அப்பள்ளி மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதோடு தொடர்புடைய ஆசிரியரை கைது செய்யவேண்டும்.

தேசிய குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக தி.மு.க. நடத்தும் கையெழுத்து இயக்கம் மூலம் யார்? யார்? தேசபக்தர்கள். யார்? யார்? தேச விரோதிகள் என தெரிந்து விடும்.

மேட்டுப்பாளையத்தில் மத்திய அரசின் தேசிய குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பிரசாரம் செய்த பாரதிய ஜனதா கட்சி, இந்து முன்னணி நிர்வாகிகள் மீது சட்டத்திற்கு எதிராக பொய் வழக்கு பதிவு செய்த மேட்டுப்பாளையம் போலீசாரின் போக்கை பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது. நகரில் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News