செய்திகள்
தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி சிறப்பு ரெயில்கள் இயக்கம்

Published On 2020-02-03 04:25 GMT   |   Update On 2020-02-03 05:42 GMT
தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கையொட்டி பக்தர்கள் வசதிக்காக தஞ்சாவூருக்கு நாளை முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
தஞ்சாவூர்:

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு விழாவையொட்டி பக்தர்கள் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

வண்டி எண்.06841 திருச்சி-தஞ்சாவூர் டெமு சிறப்பு ரெயில், நாளை முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை திருச்சியில் இருந்து பிற்பகல் 12.10 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1.30 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும்.

வண்டி எண்.06842 தஞ்சாவூர்-திருச்சி டெமு சிறப்பு ரெயில் நாளை முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 3.30 மணிக்கு திருச்சியை சென்றடையும்.

வண்டி எண்.06116 தஞ்சாவூர்-மயிலாடுதுறை சிறப்பு ரெயில் நாளை முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை தஞ்சாவூரில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 12 மணிக்கு மயிலாடுதுறையை சென்றடையும்.

வண்டி எண்.06115 மயிலாடுதுறை-தஞ்சாவூர் சிறப்பு ரெயில் நாளை முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை மயிலாடுதுறையில் இருந்து பிற்பகல் 3.20 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும்.

வண்டி எண்.06828 தஞ்சாவூர்-திருவாரூர் டெமு சிறப்பு ரெயில் நாளை முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை தஞ்சாவூரில் இருந்து இரவு 9.55 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.30 மணிக்கு திருவாரூரைச் சென்றடையும்.

வண்டி எண்.06813 திருவாரூர்-தஞ்சாவூர் டெமு சிறப்பு ரெயில் பிப்ரவரி 5-ந் தேதி முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை திருவாரூரில் இருந்து அதிகாலை 4.15 மணிக்கு புறப்பட்டு, காலை 5.45 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும்.

வண்டி எண்.06815 காரைக்கால்-தஞ்சாவூர் டெமு சிறப்பு ரெயில் நாளை முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை காரைக்காலில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1 மணிக்கு தஞ்சாவூரை வந்தடையும்.

வண்டி எண்.06812 தஞ்சாவூர்-காரைக்கால் டெமு சிறப்பு ரெயில் நாளை முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை தஞ்சாவூரில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு, மாலை 5.30 மணிக்கு காரைக்காலை சென்றடையும்.

இந்த ரெயில்கள் அதன் வழித்தடங்களில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.

சிறப்பு ரெயில் சேவையையொட்டி சில ரெயில்களின் சேவை ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி எண்டி எண்.76813/76818 காரைக்கால்- வேளாங்கண்ணி-காரைக்கால் டெமு பயணிகள் ரெயில் மற்றும் வண்டி எண்.76814/76817: வேளாங்கண்ணி-நாகப்பட்டினம்-வேளாங்கண்ணி டெமு பயணிகள் ரெயில்களின் சேவைகள் நாளை முதல் பிப்ரவரி 6-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி நிருபர்களிடம் கூறியதாவது:-

தஞ்சை பெரியகோவில் குடமுழுக்கு விழாவையொட்டி இன்றுமுதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை வழக்கமாக இயக்கப்படும் 560 பஸ்களை விட கூடுதலாக 250 சிறப்பு பஸ்கள் கும்பகோணம் கோட்டத்தின் சார்பில் இயக்கப்பட உள்ளன. மேலும் தேவைக்கேற்ப சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

Tags:    

Similar News