செய்திகள்
அமைச்சர் செல்லூர் ராஜூ

எந்த மொழிக்கும் இல்லாத பெருமை தமிழ் மொழிக்கு உண்டு அமைச்சர் செல்லூர் ராஜூ பேச்சு

Published On 2020-01-26 17:08 GMT   |   Update On 2020-01-26 17:08 GMT
எந்த மொழிக்கும் இல்லாத பெருமை தமிழ் மொழிக்கு உண்டு என்று முதுரையில் நடைபெற்ற தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

மதுரை:

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.மு.க மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடந்தது.

பொதுக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. மாணவர் அணியின் மாநில இணைச் செயலாளர் குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் நடைபெற்ற அ.தி.மு.க. மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது:-

மொழிப்போர் என்பது சாமானிய மக்களும், மாணவர்களும் பொது வாழ்விற்கு வர வேண்டும் என்பதற்காக திராவிட இயக்கங்கள் அறிவித்து நடத்திய போராட்டம்.

அறிஞர் அண்ணா போராடினார், தந்தை பெரியார் சிறு வயதிலிருந்தே தமிழுக்காக போராடினார்.மொழிப்போர் தியாகிகள் கூட்டத்தில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக 47 வருடங்கள் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டத்தை நடத்தி வருகிறது.

மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் கூட்டங்களில் பட்டாசு வெடிக்க கூடாது, யாருக்கும் துண்டு, சால்வை, அணிவிக்க கூடாது ஏனென்றால் இது தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் கூட்டம்.

எம்.ஜி.ஆர் திரைப்படத்தில் கூட தன்னுடைய எதிரி தன்னை போல் பலமாக இருக்க வேண்டும் என்று எண்ண கூடியவர், அதன் அடிப்படையில் தான் தனது அரசியல் எதிரியாக கலைஞரை எதிர் கொண்டவர் எம்.ஜி.ஆர்.

எந்த மொழிக்கும் இல்லாத பெருமை தமிழ் மொழிக்கு உண்டு. அதனால் தான் இந்திய பிரதமர் மோடி ‘‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’’ என திருக்குறள் போன்றவற்றை எடுத்து கூறி பேசுகிறார்.

நமது தமிழ் மண்ணில் மதுரையில் பிறந்தவர் தற்போதய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தா ராமன். இதுவெல்லாம் தமிழுக்கு பெருமை சேர்த்தது அ.தி.மு.க அரசு தான்.

எம்.ஜி.ஆர் நடத்திய உலக தமிழ் மாநாட்டை உலகில் உள்ள தமிழ் அறிஞர்கள் எல்லாம் ஆதரித்தார்கள். ஆனால் கலைஞர் நடத்திய செம்மொழி மாநாடு எனும் உலக தமிழ் மாநாட்டை உலக தமிழ் மாநாட்டை அங்கீகரிக்கும் அமைப்புகளே அங்கீகரிக்க வில்லை.

கோவை செம்மொழி மாநாட்டில் கலைஞர் உலகெங்கிலும் இருந்து வந்த தமிழ் அறிஞர்களை மரியாதை மதிப்பின்றி நடத்தினார். கலைஞர் குடும்பத்தினரை மட்டும் முன் இருக்கையில் அமர வைத்து மாநாடு நடத்தியவர் கலைஞர். தி.மு.க. ஒரு குடும்ப கட்சியாகவே செயல்பட்டு வருகிறது. ஆனால் அ.தி.மு.க.வில் வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் பதவியும் வாய்ப்பும் கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News