செய்திகள்
கவர்னர் கிரண்பேடி

கணவர் பெயரை இனிஷியலாக போட கட்டாயப்படுத்தக்கூடாது- கவர்னர் கிரண்பேடி

Published On 2020-01-25 10:18 GMT   |   Update On 2020-01-25 10:18 GMT
பெண்கள் திருமணத்துக்கு பிறகு கணவரது பெயரை இனிஷியலாக போட கட்டாயப்படுத்த கூடாது. விருப்பப்பட்டால் தந்தை, தாய் பெயரை போட்டுக்கொள்ளலாம் என்று புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி கூறினார்.
புதுச்சேரி:

கவர்னர் மாளிகையில் இந்திராகாந்தி தேசிய கலை மையத்தின் புதுவை மண்டலம் சார்பில் தேசியபெண் குழந்தைகள் தின விழா நடந்தது.

விழாவிற்கு தலைமை வகித்து கவர்னர் கிரண்பேடி பேசியதாவது:-

பெண் குழந்தைகள் சாபம் அல்ல, வாழ்வின் வரம். ஆண்-பெண்ணை சமமாக பாவிக்க வேண்டும். இன்றைக்கு பெண் குழந்தைகள் தைரியமாக உள்ளனர். சுதந்திரமாக யோசிக்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் கல்விதான். பெண்கள் திருமணத்துக்கு பிறகு கணவரது பெயரை இனிஷியலாக போட்டுக்கொள்கின்றனர். இதனை கட்டாயப்படுத்த கூடாது. விருப்பப்பட்டால் தந்தை, தாய் பெயரை போட்டுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பெண் குழந்தைகள் இயற்கையின் பரிசு என்று தலைப்பில் பொம்மலாட்ட நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்வையற்ற கலைஞர்கள் ஜோசப் ஆண்டனி, சாலை மாரியம்மன், மாற்றுதிறனாளி கோகுல் உள்ளிட்ட 6 கலைஞர்கள் நிகழ்த்தி காட்டினர்.

லாஸ்பேட்டை தன்னம்பிக்கை குழுவின் ‘மகளே மகிழ்ச்சி’ என்ற குறும்படம் திரையிடப்பட்டது.

தொடர்ந்து கவர்னர் கிரண்பேடி பள்ளி மாணவிகளுடன் கலந்துரையாடினார். விழாவில் முத்துரத்தின அரங்கம் மேல்நிலைப்பள்ளி மற்றும் பிரெசிடென்சி மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

முடிவில் இந்திரா காந்தி தேசிய கலை மைய புதுவை மண்டல இயக்குனர் கோபால் நன்றி கூறினார்.

Tags:    

Similar News