செய்திகள்
ஞானதேசிகன்

ரஜினியின் கருத்து அவரது ஆளுமையை காட்டுகிறது- ஞானதேசிகன் கருத்து

Published On 2020-01-24 13:06 GMT   |   Update On 2020-01-24 13:06 GMT
பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறியது அவரது ஆளுமையை காட்டுகிறது என்று ஞானதேசிகன் கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னை:

த.மா.கா. மூத்த துணை தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான ஞானதேசிகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் சோவின் தைரித்தையும் துக்ளக் இதழ் தைரியமாக சேலம் ஊர்வல படங்களையும் வெளியிட்டதை குறித்து பேசியது அந்த இதழின் 50-ம் ஆண்டு விழாவிற்கு பொருத்தமான பேச்சு. 1971-ல் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட துக்ளக் இதழை ரூ.300 கொடுத்து நான் வாங்கினேன் என்பது உண்மை.

ராமரை செருப்பால் அடித்ததை பெரியாரே பேசினார் என்பதையும் அதற்கு பின்பு மதுரையில் அன்றைய முதல்வர் கருணாநிதி மத உணர்வுகளை புண்படுத்துகின்ற ஆபாச நிகழ்வுகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பேசிதையும் இதை பத்திரிகைகள் வெளியிட்டதையும் யாரும் மறைக்க முடியாது. ரஜினிகாந்த் மீது திராவிடர் கழகத்தினர் கோபமடைவது இயற்கை. ஆனால் மற்ற இயக்கங்கள் கருத்து சொல்வது ஏன் என்று புரியவில்லை.

ரஜினி தனது பேட்டியில் நான் மன்னிப்போ, வருத்தமோ தெரிவிக்க மாட்டேன் என சொன்னது அவருடைய ஆளுமையை குறிக்கின்றது என்பது எனது தனிப்பட்ட கருத்து.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Tags:    

Similar News