செய்திகள்
கோப்பு படம்

வாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

Published On 2020-01-23 12:15 GMT   |   Update On 2020-01-23 12:15 GMT
நித்திரவிளை அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:

குமரி மேற்கு மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டிய பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

நித்திரவிளை பகுதியில் நேற்று மாலை சப்-இன்ஸ்பெக்டர் சோபனராஜ், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் அந்த வழியாக சென்ற வாகனங்களை கண்காணித்து கொண்டிருந்தனர்.

மேலும் சந்தேகப்படும் வாகனங்களை நிறுத்தி சோதனையிலும் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் அதிவேகமாக வந்தனர். அவர்களை போலீசார் கைகாட்டி நிறுத்தினர்.

அப்போது மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மீது மோதியதோடு, அவரை தாக்கவும் செய்தனர். இதில் படுகாயம் அடைந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.

அவருடன் பணியில் இருந்த போலீசார், மணிகண்டனை மீட்டு குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதற்கிடையே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டனை தாக்கியதாக மார்த்தாண்டம் துறையை சேர்ந்த அனீஷ் (வயது 33), செல்வராஜ் (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கைதான இருவரிடமும் நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் விசாரணை நடத்தினார். பின்னர் அவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்பட இந்திய தண்டனை சட்டம் 294 பி, 332, 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
Tags:    

Similar News