செய்திகள்
வருமானவரித்துறை சோதனை நடந்த வேலம்மாள் பள்ளி.

தேனி வேலம்மாள் பள்ளியில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறை சோதனை

Published On 2020-01-22 04:55 GMT   |   Update On 2020-01-22 04:55 GMT
தேனி வேலம்மாள் பள்ளியில் 2-வது நாளாக இன்றும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.
தேனி:

தேனி அருகில் உள்ள முத்துதேவன்பட்டியில் வேலம்மாள் கல்வி குழும வளாகம் அமைந்துள்ளது. இங்கு வேலம்மாள் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆகியவை செயல்படுகிறது.

நேற்று மதுரை மாவட்ட வருமானவரித்துறை அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் 10 பேர் சோதனையிட வந்தனர். பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 9 மணி வரை நீடித்தது. ஒரு குழுவினர் மெட்ரிக் பள்ளியிலும் மற்றொரு குழுவினர் சி.பி.எஸ்.இ. பள்ளியிலும் ஒரே நேரத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.

பள்ளியில் இருந்த ஆவணங்கள் மற்றும் இருப்பில் இருந்த பணங்கள் அதற்கான ரசீதுகள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இன்று 2-வது நாளாக வருமானவரித்துறையினர் மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் வேலம்மாள் கல்விக்குழுமங்களுக்கு சொந்தமான 50 இடங்களில் தொடர்ந்து சோதனை நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.




Tags:    

Similar News