செய்திகள்
திருமாவளவன்

தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும்- திருமாவளவன் பேட்டி

Published On 2020-01-21 12:59 GMT   |   Update On 2020-01-21 12:59 GMT
தஞ்சை பெரிய கோவிலில் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

கும்பகோணம்:

கும்பகோணத்தில் உப்புக்கார தெருவில் நடந்து சென்ற விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த மாவட்ட செயலாளர் தமிழருவியை காரில் வந்த மர்ம கும்பல் தாக்கினர். மேலும் அவருடன் வந்த அவரது மகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் உறவினர் பிரகாஷ் ,கார்த்திக் ஆகிய இருவருக்கும் காயம் ஏற்பட்டு 3 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்து வருகின்றனர். பிப்ரவரி 15-ந்தேதி நடைபெற இருந்த தேசம் காப்போம் பேரணி பிப்ரவரி 22-ந் தேதி நடைபெறுகிறது. இந்த பேரணியில் லட்சக் கணக்கானோர் கலந்து கொள்கிறார்கள்.

தஞ்சையில் பெரிய கோவிலில் நடைபெறுகின்ற குடமுழுக்கு விழாவில் தமிழில் குடமுழுக்கு விழா நடைபெற வேண்டும் என்று வலுவான கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக அரசு அதை பரிசீலிக்க வேண்டும்.

5-ம் வகுப்பு மாணவருக்கு பொதுத்தேர்வு நடத்த அறிவித்திருப்பது ஒரு வகையான அரச பயங்கரவாத நடவடிக்கை. எனவே 5-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தும் தமிழக அரசு முற்றிலுமாக கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது நிர்வாகிகள் விவேகானந்தன், அரசு முதல்வன், வெண்மணி மற்றும் நிர்வாகிகள் இளைஞர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News