செய்திகள்
கோப்பு படம்

பேஸ்புக் காதல் - பெண்ணின் வயதை தெரிந்து விலகிய வாலிபரை கொல்ல முயற்சி

Published On 2020-01-21 12:31 GMT   |   Update On 2020-01-21 12:31 GMT
பேஸ்புக்கில் காதல் வசப்பட்ட வாலிபர் பெண்ணின் வயதை தெரிந்து விலகியதால் அவரை கொல்ல முயற்சி செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:

மலேசியாவைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரி (வயது 45). இவர் பல்வேறு பெயர்களில் பேஸ்புக் கணக்கு தொடங்கி வாலிபர்களிடம் பேசி வந்துள்ளார். அதன்படி தேனியைச் சேர்ந்த அசோக்குமார் (வயது 25) என்பவரிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் நன்றாக பேசிய அசோக்குமார் பின்னர் அவரது வயது 45 என தெரியவரவே திருமணம் செய்ய மறுத்துள்ளார். ஆனால் விக்னேஸ்வரி தொடர்ந்து அசோக்குமாருக்கு தொந்தரவு செய்து வந்துள்ளார். மேலும் கூலிப்படையை ஏவி கொலை செய்யவும் முடிவு செய்தார்.

அதன்படி போடியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் போலீசார் நடத்திய சோதனையில் அசோக்குமாரை கொல்ல தங்கி இருந்த கூலிப்படையினர் சிக்கினர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த அன்பரசன் (24), முனியசாமி (27), அய்யனார் (30), திருமுருகன் (21), ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ஜோசப் பாஸ்டின் குமார் (20), நிலக்கோட்டையைச் சேர்ந்த பாஸ்கரன் (47), தேனி அல்லிநகரத்தைச் சேர்ந்த யோகேஸ் (20), தினேஷ் (22), கார்த்திக் (20) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் போடி ராசிங்காபுரத்தைச் சேர்ந்த ராஜேஸ் என்பவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர்களிடம் நடத்திய விசாரணையின் பேரில் கூலிப்படையை அனுப்பிய விக்னேஸ்வரி சென்னையைச் சேர்ந்த குட்டி என்ற சோனைமுத்துவுக்கு அதிக அளவு பணம் கொடுத்து இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவரது சொந்த ஊரான கமுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

அங்கு சென்ற போடி டவுன் போலீசார் குட்டி என்ற சோனை முத்துவை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இவர்தான் கூலிப்படையை தயார் செய்து அவர்களுக்கு பணம் வழங்கியவர் என தெரிய வந்துள்ளது. இதுவரை இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விக்னேஸ்வரியை பிடிக்க மலேசிய தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Tags:    

Similar News