செய்திகள்
பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராய பாட்டில்கள்.

அவினாசி அருகே 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

Published On 2020-01-18 04:41 GMT   |   Update On 2020-01-18 04:41 GMT
அவினாசி அருகே தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 450 கேன்களில் தலா 35 லிட்டர் வீதம் சுமார் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவை:

வெளி மாநிலங்களில் இருந்து எரிசாராயம் கடத்தி வந்து கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கொண்டு சென்று கள்ளில் கலந்து விற்பனை செய்யப்படுவதாக சேலம் மத்திய புலனாய்வு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். கடந்த மாதம் பொள்ளாச்சி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே சேவூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட சின்னக்கானூர் என்ற பகுதியில் கணேசன் என்பவர் தோட்டத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்து இருப்பதாக சேலம் மத்திய குற்றபுலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் இன்று அதிகாலை 2 மணியளவில் சின்னக்கானூர் பகுதியில் உள்ள கணேசன் தோட்டத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு 450 கேன்களில் தலா 35 லிட்டர் வீதம் சுமார் 16 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து எரிசாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் அவற்றை கடத்தி பதுக்கி வைத்திருந்த கணேசனையும் கைது செய்தனர்.
Tags:    

Similar News