செய்திகள்
மேட்டூர் அணை (கோப்புப்படம்)

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரிப்பு

Published On 2020-01-18 04:32 GMT   |   Update On 2020-01-18 04:32 GMT
மேட்டூர் அணைக்கு நேற்று 824 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 882 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர், ஜன. 18-

காவிரி நீர்பிடிப்பு பகுதி களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வந்தது. இந்த நிலையில் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று அதிகரித்துள்ளது.

நேற்று 824 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று மீண்டும் அதிகரித்து 882 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக காவிரியில் 8 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து பல மடங்கு கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படு வதால் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

நேற்று 109.90 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று மேலும் சரிந்து 109.45 அடியாக சரிந்தது. இனி வரும் நாட்களில் அணைக்கு நீர்வரத்து மேலும் குறையும் பட்சத்தில் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் வேகமாக சரிய வாய்ப்புள்ளது.

Tags:    

Similar News