செய்திகள்
வாட்ஸ்அப் பார்த்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்.

திண்டுக்கல் அருகே வாட்ஸ்அப் பார்த்தபடி பஸ் ஓட்டிய டிரைவர்

Published On 2020-01-17 04:41 GMT   |   Update On 2020-01-17 04:41 GMT
திண்டுக்கல் அருகே மொபைல் போனில் வாட்ஸ்அப் பார்த்தபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
திண்டுக்கல்:

பழனியில் இருந்து திண்டுக்கல் வழியாக செந்துறைக்கு தனியார் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை ஓட்டிய டிரைவர் திண்டுக்கல் வரும் வழியில் தனது மொபைல் போனை ஒரு கையால் பிடித்துக் கொண்டும் மற்றொரு கையால் ஸ்டியரிங்கை பிடித்தபடியும் ஓட்டினார்.

கியர் மாற்றும் போது ஸ்டியரிங்கை விட்டு விட்டு கியர் மாற்றினார். இது போன்று தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு மேலாக ஒரு கையால் பஸ்சை இயக்கிக் கொண்டு மற்றொரு கையால் வாட்ஸ்அப் பார்த்தபடி சாலையை கவனிக்காமல் பஸ்சை ஓட்டினார்.

இது குறித்து பஸ்சில் இருந்து சில பயணிகள் எச்சரித்தும் அவர் கண்டுகொள்ளவில்லை. இதனையடுத்துஅவரது செயல்களை பயணிகளில் ஒருவர் தனது மொபைல் போனில் படம் பிடித்தார். அந்த வீடியோவில் 15 நிமிடங்களுக்கு மேலாக தொடர்ந்து மொபைல் போனை பார்த்துக்கொண்டே சாலையை அவ்வப்போது கவனித்து பஸ்சை இயக்குவது, ஒரு கையால் பஸ்சைஇயக்குவது ஆகியவை பதிவாகி இருந்தது.

இந்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. எனவே சம்மந்தப்பட்ட டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News