செய்திகள்
பென்னிகுக் சிலைக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

பென்னிகுக் பிறந்த நாள்- துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மரியாதை

Published On 2020-01-16 06:26 GMT   |   Update On 2020-01-16 06:26 GMT
கர்னல் ஜான்பென்னிகுக் நினைவு மணிமண்டபத்தில் தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கூடலூர்:

லோயர்கேம்ப்பில் உள்ள கர்னல் ஜான்பென்னிகுக் நினைவு மணிமண்டபத்தில் அவருடைய 179வது பிறந்த நாள் விழாவையொட்டி தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட 5 மாவட்ட மக்களின ஜீவாதாரமாக முல்லைப் பெரியாறு திகழ்கிறது. இந்த அணையை கட்டிய இங்கிலாந்து பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுக்கின் நினைவாக அவருக்கு தமிழக அரசு சார்பில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு லோயர்கேம்ப்பில் நினைவு மண்டபமும் அவருடைய முழு உருவ வெண்கல சிலையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மணி மண்டபத்திற்கு தேனி மாவட்ட மக்கள் மட்டும் இன்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து பார்வையிட்டு செல்கின்றனர். அவருடைய 179வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த ஆண்டு தமிழக அரசு முதன் முறையாக அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையொட்டி லோயர்கேம்ப்பில் உள்ள மணி மண்டபத்தில் பென்னிகுக்கின் முழு உருவச் சிலை அலங்கரிங்கப்பட்டும், மண்டப வளாகம் முழுதும் வண்ண விளக்குகளால் அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

தமிழக துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி பிறந்த நாள் விழாவை தொடங்கி வைத்தார். மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி, 5 மாவட்ட பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கம், கூடலூர் அனைத்து விவசாயிகள் சங்கம், முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், முல்லைப் பெரியாறு பாதுகாப்பு குழு, முல்லைப்பெரியாறு அணை மீட்புக்குழு உள்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். வெளிநாட்டினரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News