செய்திகள்
பாஜக

கம்பம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பா.ஜ.க.வை சேர்ந்த பெண் தேர்வு

Published On 2020-01-11 07:36 GMT   |   Update On 2020-01-11 07:36 GMT
கம்பம் ஊராட்சி ஒன்றிய தலைவராக பா.ஜ.க.வைச் சேர்ந்த பெண் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கம்பம்:

தமிழகம் முழுவதும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. கம்பம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 4 வார்டுகளில் அ.தி.மு.க. 2, தி.மு.க. 1, பா.ஜ.க. ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.

தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்ற நிலையில் அ.தி.மு.க. ஆதரவுடன் பா.ஜ.கவைச் சேர்ந்த பழனிமணி வெற்றி பெற்றார். கம்பம் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி பெண்களுக்காக ஒதுக்கப்பட்டு இருந்தது. அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட 2 பேரும் ஆண் வேட்பாளர்கள் என்பதால் தலைவர் பதவியை பிடிக்க முடியவில்லை. எனவே பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட பழனிமணியை அ.தி.மு.க. ஆதரவுடன் வெற்றி பெற வைத்து தலைவர் ஆக்கியுள்ளனர்.

தேனி மாவட்டத்திலேயே பா.ஜ.க. சார்பில் முதன் முறையாக ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை ஒரு பெண் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags:    

Similar News