செய்திகள்
வைகோ

ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வாபஸ்- வைகோ கண்டனம்

Published On 2020-01-10 05:58 GMT   |   Update On 2020-01-10 05:58 GMT
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு கொடுக்கப்பட்டு வந்த உயர்மட்ட இசட் பிரிவு பாதுகாப்பினை அரசு விலக்கிக்கொண்டு இருப்பது தவறான நடவடிக்கையாகும்.

தமிழ்நாட்டில் பெரியார், அண்ணா லட்சியங்களுக்கு எதிராக, திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படும் கருத்துகளுக்கு ஸ்டாலினே சரியான எதிர்ப்பைக் காட்டி வருகிறார். மக்கள் செல்வாக்கு அவருக்கு நாளும் அதிகரித்து வருகிறது.

பெரியார் சிலையை உடைப்பது போன்ற கேடான செயல்கள் தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உயர்மட்ட பாதுகாப்பு தொடர்வதுதான் நியாயமானது.

அவருக்குக் கொடுக்கப்பட்டு வந்த காவல் பாதுகாப்பை விலக்கிக்கொண்ட தமிழக அரசுக்கும், அதற்கு ஏற்பாடு செய்த மத்திய அரசுக்கும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News