செய்திகள்
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் தி.மு.க கவுன்சிலர் செல்வம் அ.தி.மு.க.வில் இணைந்த காட்சி.

ஓபிஎஸ் முன்னிலையில் திமுக கவுன்சிலர் அதிமுகவில் இணைந்தார்

Published On 2020-01-08 10:16 GMT   |   Update On 2020-01-08 10:16 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் 8-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
பெரியகுளம்:

ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றும் முயற்சியில் அதிமுக, திமுக கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இதனால் கவுன்சிலர்களை தங்கள் பக்கம் தக்க வைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 16 வார்டுகள் உள்ளன. இதில் 8 வார்டுகளை தி.மு.க.வும், 6 வார்டுகளை அதிமுகவும், தலா ஒரு வார்டில் தேமுதிக, சுயேச்சையும் வெற்றிபெற்றன. இதனால் யூனியன் தலைவர் பதவியை தி.மு.க. கைப்பற்றும் நிலை இருந்தது. இந்த நிலையில் திமுக கவுன்சிலர் ஒருவர் அணி மாறியதால், ஒன்றிய தலைவர் பதவியை அதிமுக கைப்பற்றும் வாய்ப்பு அதிகமாகி உள்ளது.

8-வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற செல்வம் என்பவர், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார். இதன் காரணமாக பெரியகுளம் ஒன்றியத்தில் உள்ள 16 கவுன்சிலர்களில், அதிமுக வசம் உள்ள கவுன்சிலர்களின் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News