செய்திகள்
அதிமுக

கோவை மாவட்டத்தில் 6 ஊராட்சி ஒன்றியங்களை அதிமுக கைப்பற்றியது

Published On 2020-01-04 07:19 GMT   |   Update On 2020-01-04 07:19 GMT
கோவை மாவட்டத்தில் மொத்தம் 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இதில் காரமடை, கிணத்துக்கடவு, பெரியநாயக்கன்பாளையம், பொள்ளாச்சி வடக்கு, எஸ்.எஸ்.குளம், தொண்டாமுத்தூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியங்களை அ.தி.மு.க. கைப்பற்றியது.

கோவை:

பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் தி.மு.க. வெற்றி பெற்றதால் தலைவர், துணைத்தலைவர் பதவியை பிடித்துவிடும். மதுக்கரை ஒன்றியத்தில் உள்ள 6 வார்டுகளில் அ.தி.மு.க. 3 இடங்களையும், தி.மு.க. 3 இடங்களையும் பெற்று சம பலத்துடன் உள்ளது. இங்கு தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளை கைப்பற்றுவதில் கடும்போட்டி ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள 13 வார்டுகளில் அ.தி.மு.க. 6 இடங்களை பெற்றுள்ளது. தி.மு.க. 5 இடங்களை பிடித்தது. சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

அன்னூர் ஒன்றியத்தில் உள்ள 15 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி 7 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 6 இடங்களிலும் வென்றுள்ளது. சுயேச்சைகள் 2 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

சூலூர் ஒன்றியத்தில் 14 வார்டுகளில் அ.தி.மு.க. 7 இடங்களையும், தி.மு.க 5 இடங்களையும் சுயேச்சைகள் 2 இடங்களையும் கைப்பற்றியுள்ளனர். சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 13 வார்டுகளில் அ.தி.மு.க. கூட்டணி 6 இடங்களிலும், தி.மு.க. கூட்டணி 6 இடங்களிலும், சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளார். இந்த 4 ஒன்றியங்களில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

சுயேச்சைகள் யாருக்கு ஆதரவளிப்பார்களோ அதனைப்பொருத்தே தலைவர், துணைத்தலைவர் பதவியை அ.தி.மு.க. கைப்பற்றுமா? அல்லது தி.மு.க. கைப்பற்றுமா? என்பது தெரியும். சுயேச்சைகளின் ஆதரவை பெற்ற இரு கட்சிகளும் தீவிர முயற்றி செய்து வருகின்றன.

கோவையில் 17 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 10 இடங்களை அ.தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சியான பா.ஜனதா 2 இடங்களிலும் வென்றன. தி.மு.க. 5 இடங்களை கைப்பற்றியுள்ளது.

Tags:    

Similar News