செய்திகள்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

ஒன்றிய குழு உறுப்பினர் பதவி- 94 இடங்களில் அமமுக வெற்றி

Published On 2020-01-04 05:32 GMT   |   Update On 2020-01-04 05:32 GMT
தமிழகத்தில் 2 கட்டமாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான போது அ.ம.மு.க. 94 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி இடங்களை கைப்பற்றி உள்ளது.
சென்னை:

உள்ளாட்சி தேர்தலில் டி.டி.வி. தினகரனின் அ.ம.மு.க. எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட்டது.

பாராளுமன்ற தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அ.ம.மு.க. தோல்வி அடைந்தது. இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தலுக்காக டி.டி.வி. தினகரன் தீவிர பிரசாரம் செய்தார்.

நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான போது அ.ம.மு.க. 94 ஒன்றிய குழு உறுப்பினர் பதவி இடங்களை கைப்பற்றி உள்ளது.

அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 14 ஒன்றிய குழு உறுப்பினர் இடங்களில் அ.ம.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

கயத்தாறு ஒன்றியத்தில் 16 வார்டுகள் உள்ளன. இதில் 11 வார்டுகளை அ.ம.மு.க. கைப்பற்றி உள்ளது. எனவே கயத்தாறு ஒன்றியக்குழு தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவி அ.ம.மு.க.வுக்கு உறுதியாகி உள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் கண்ணங்குடி ஒன்றியத்தில் 6 வார்டுகள் உள்ளன. இதில் 4 வார்டுகளை அ.ம.மு.க. கைப்பற்றி உள்ளது. எனவே இந்த ஒன்றியமும் அ.ம.மு.க. வசமானது.

மொத்தத்தில் அரியலூர் மாவட்டத்தில் 2 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி, ராமநாதபுரம்-5, ஈரோடு-4, கடலூர்-5, கிருஷ்ணகிரி-1, கோவை-1, சிவகங்கை-8, சேலம்-1, தஞ்சாவூர்-10, தருமபுரி-2, திண்டுக்கல் மாவட்டத்தில் 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் 2, திருவண்ணாமலை-6, திருவள்ளூர்-2, திருவாரூர்-2, தூத்துக்குடி-14, தேனி-5, நாகை-2, நாமக்கல்-2, நீலகிரி-1, புதுக்கோட்டை-5, பெரம்பலூர்-1, மதுரை-7, விருதுநகர்-3 என 94 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவி இடங்களை அ.ம.மு.க. கைப்பற்றி உள்ளது.

உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கும், வேட்பாளர்களின் வெற்றிக்கு உழைத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கும் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் நன்றி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News