செய்திகள்
பெண் அதிகாரி அனந்த நாயகி

கோவை சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை - மற்றொரு குற்றவாளியை பிடிக்க பெண் அதிகாரி நியமனம்

Published On 2019-12-31 11:46 GMT   |   Update On 2019-12-31 12:05 GMT
கோவையில் சிறுமி பாலியல் வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை வழங்கிய நிலையில் மற்றோரு குற்றவாளியை பிடிக்க பெண் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கோவை:

கோவை துடியலூர் பன்னிமடை பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 27-ந்தேதி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

சிறுமியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த சந்தோஷ் குமார்(34) என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

கோவை மகளிர் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. பின்னர் புதிதாக திறக்கப்பட்ட போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு வழக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது.

இந்த வழக்கில் கடந்த 27-ந்தேதி கொலையாளி சந்தோஷ் குமாருக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி ராதிகா உத்தரவிட்டார். மேலும் கொலை செய்யப்பட்ட சிறுமியின் தாய் கோர்ட்டில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில் தனது மகளின் டி.என்.ஏ. அறிக்கையில் மற்றொரு வரும் பாலியல் பலாத்காரம் செய்திருப்பதாக தெரிய வந்துள்ளது. எனவே இதுகுறித்தும் விசாரணை நடத்தி குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார். கொலையாளிக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி சிறுமியை பலாத்காரம் செய்த மற்றொருவரையும் கண்டுபிடிக்க பெண் இன்ஸ்பெக்டரை நியமிக்க வேண்டும் என்று தீர்ப்பில் கூறியிருந்தார்.

அதன்படி இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியை கண்டுபிடிக்க கோவை மாவட்ட குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டர் அனந்தநாயகியை நியமனம் செய்து போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் அனந்த நாயகி சிறந்த புலன் விசாரணை அதிகாரிக்கான பதக்கத்தை பெற்றவர். அனந்த நாயகி சிறுமி பாலியல் பலாத்காரத்தில் தொடர்புடைய மற்றொரு நபர் குறித்து விசாரணை தொடங்கினார். இதனால் இந்த வழக்கு சூடுபிடித்துள்ளது.
Tags:    

Similar News