செய்திகள்
கோப்புப்படம்

ஏ.டி.எம். எந்திரம் என நினைத்து ‘பாஸ்புக்’ மிஷினை உடைத்த கொள்ளையன்

Published On 2019-12-16 05:01 GMT   |   Update On 2019-12-16 05:01 GMT
சென்னை சைதாப்பேட்டையில் ஏ.டி.எம். எந்திரம் என நினைத்து ‘பாஸ்புக்’ மிஷினை உடைத்த கொள்ளையன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை:

சைதாப்பேட்டை ஜூனியஸ் சாலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையம் உளளது.

நேற்று இரவு இந்த ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையன் ஒருவன் புகுந்தான். பணம் எடுக்கும் ஏ.டி.எம். எந்திரமும், அதன் அருகில் வங்கி பாஸ்புக்கை பதிவு செய்யும் இன்னொரு எந்திரமும் இருந்தது.

இதில் ஏ.டி.எம். எந்திரம் என நினைத்து பாஸ்புக் மிஷினை உடைத்தான். அப்போது மும்பையில் உள்ள எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் அலாரம் அடித்தது.

இதையடுத்து வங்கி அதிகாரிகள் இதுபற்றி சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சைதாப்பேட்டை போலீசார் விரைந்து சென்று விசார ணை நடத்தினர். எந்திரத்தை உடைத்த கொள்ளையன் தப்பி ஓடிவிட்டான். அவனது புகைப்படம் மும்பையில் அலாரம் அடித்த வங்கி தலைமை அலுவலகத்தில் பதிவாகி இருந்தது.

அந்த படத்தை வங்கி அதிகாரிகள் சென்னை போலீசுக்கு அனுப்பி வைத்தனர். இந்த படத்தை வைத்து கொள்ளையனை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை போட்டு பார்த்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News