செய்திகள்
கோப்புப்படம்

வெளிநாட்டில் இருந்து தொடங்கிய வேட்டை- தென்கொரிய வாலிபரிடம் இரண்டரை லட்சம் ஆபாச வீடியோக்கள்

Published On 2019-12-13 07:25 GMT   |   Update On 2019-12-13 07:25 GMT
தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆபாச வீடியோ விவகாரம் தென் கொரியாவில் இருந்து தொடங்கியுள்ளது.
திருச்சி:

தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆபாச வீடியோ விவகாரம் தென் கொரியாவில் இருந்து தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டு தென்கொரியா நாட்டில் கைது செய்யப்பட்ட வாலிபரிடமிருந்து கம்ப்யூட்டர் மற்றும் சர்வர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர் குழந்தைகள், சிறுமிகள், சிறுவர்களுடன் பாலியலில் ஈடுபடும் வீடியோக்களுக்கு என தனி இணையதளங்களை உருவாக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் 2 லட்சத்து 50 ஆயிரம் வீடியோ படங்கள் இருந்தன. அதில் 45 சதவீத படங்கள் புதிதாக எடுக்கப்பட்டதாகும்.

அவருடன் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் இணையதளம் மூலம் தொடர்பு ஏற்படுத்தி அதில் சிறுவர், சிறுமிகளுடன் வன்புணர்வில் ஈடுபடும் காமுகர்களின் படக்காட்சிகளை செல்போன்கள் மூலம் பகிர்ந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அனைத்து நாடுகளின் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உஷார்படுத்தப்பட்டது. இதன் அடிப்படையிலேயே மத்திய உளவுப்பிரிவினர் தமிழக போலீசாரை உஷார்படுத்தினர்.

தமிழக குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ரவி இதுபற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு பேட்டி அளித்தார். அதன் பிறகே ஆபாச வீடியோ விவகாரம் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது.

தமிழகம் முழுவதும் 1,500 பேர் இது போன்று குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை டவுன்லோடு செய்து பரப்பி வருவது கண்டுபிடிக் கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார். இதன் அடிப்படையிலேயே திருச்சியில் இருந்து கைது வேட்டை தொடங்கியுள்ளது. இது அடுத்த கட்டமாக சென்னை, செங்கல்பட்டு, கோவை, திருச்சியிலும் தொடரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News