செய்திகள்
ரெயில் (கோப்புப்படம்)

சென்னை-புதுவை பாசஞ்சர் ரெயிலில் நவீன வசதி

Published On 2019-12-11 08:31 GMT   |   Update On 2019-12-11 08:31 GMT
சென்னை எழும்பூர்- புதுச்சேரி இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் மாற்றப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய ‘மெமு’ ரெயிலாக இன்று முதல் இயக்கப்பட உள்ளது.
சென்னை:

சென்னையில் இருந்து புறநகரங்களுக்கு பாசஞ்சர் ரெயில்கள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் வேகத்தை அதிகப்படுத்தவும், நவீன வசதிகளுடன் கூடிய ரெயில்களை இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்த கோரிக்கையை ஏற்று நவீன வசதிகளுடன் கூடிய ரெயில்களை ரெயில்வே நிர்வாகம் அறிமுகப்படுத்தி வருகிறது.

இந்த வகையில் சென்னை- புதுச்சேரி, தாம்பரம்- விழுப்பும், அரக்கோணம்- காட்பாடி, வேலூர் கண்டோன்மெண்ட் - அரக்கோணம் ஆகிய வழித்தடங்களில் நவீன வசதிகளுடன் கூடிய ‘மெமு’ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. மெமு என்பது மின்சாரத்தில் இயங்கும் ரெயில் பெட்டிகளாகும்.

சென்னை எழும்பூர்- புதுச்சேரி இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில் மாற்றப்பட்டு நவீன வசதிகளுடன் கூடிய ‘மெமு’ ரெயிலாக இன்று முதல் இயக்கப்பட உள்ளது.

மறு மார்க்கமாக புதுச்சேரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு ‘மெமு’ ரெயில் இயக்கப்பட உள்ளது.

தாம்பரம்- விழுப்புரம் இடையே இரு மார்க்கமாக இயக்கப்படும் பாசஞ்சர் ரெயிலை ‘மெமு’ ரெயிலாக மாற்றி வருகிற 26-ந் தேதி முதல் இயக்கப்பட உள்ளது.

சென்னை எழும்பூர்-புதுச்சேரி, தாம்பரம்- விழுப்புரம் ‘மெமு’ ரெயில்களில் 12 பெட்டிகள் இடம் பெறுகின்றன.

மேலும் அரக்கோணம்- காட்பாடி இடையே இரு மார்க்கமாகவும், அரக்கோணம்- வேலூர் கண்டோன்மெண்ட் இடையே இருமார்க்கமாகவும் வருகிற 16-ந்தேதி முதல் ‘மெமு’ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த ரெயில்களில் 8 பெட்டிகள் இடம் பெற்றுள்ளன.

இந்த ‘மெமு’ ரெயிலில் கு‌ஷன் இருக்கைகள், எல்.இ.டி. விளக்கு, பயோ கழிவறை உள்பட பல்வேறு நவீன வசதிகள் இடம் பெற்றுள்ளன. ரெயிலின் இருபுறமும் என்ஜின் பொருத்தப்பட்டு இருக்கும். இதனால் ஒவ்வொரு முறையும் ரெயில் என்ஜின் மாற்றி அமைப்பதில் ஏற்படும் காலதாமதம் தவிர்க்கப்படும்.
Tags:    

Similar News