செய்திகள்
கோப்பு படம்

கோவையில் மூளைச்சாவடைந்த பெண் - 7 பேருக்கு மறுவாழ்வு அளித்தார்

Published On 2019-12-10 09:37 GMT   |   Update On 2019-12-10 09:37 GMT
கோவையில் ரத்த அழுத்தம் அதிகமாகி மூளைச்சாவடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் 7 பேருக்கு தானமாக வழங்கப்பட்டது.
கோவை:

கோவை மணியக்காரன்பாளையம் பாலமுருகன் நகர் 2-வது வீதியில் வசித்தவர் சாந்தமணி (வயது 50). ரத்த அழுத்தம் அதிகமாகி மூளையில் ரத்தக்கசிவுடன் கோவை. கே.எம்.சி.எச் ஆஸ்பத்திரியில் மூளைச்சாவு அடைந்தார். இதனைத் தொடர்ந்து அவரது மகன்கள் சதீஷ்குமார், தனசேகர் ஆகியோர் சாந்தமணி உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். தமிழ்நாடு உறுப்பு தான ஆணையத்தின் அனுமதியுடன் அவரது இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், கல்லீரல் மற்றும் கண்கள், ஆகியவை தானமாக பெறப்பட்டது.

நுரையீரல், கல்லீரல், ஒரு சிறுநீரகம் கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரிக்கும், மற்றொரு சிறுநீரகம், கண்கள் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், இதயம் சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கும் வழங்கப்பட்டது. கே.எம்.சி.எச். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் உறுப்புகளை மற்ற நோயாளிகளுக்கு பொருத்துவதற்கு தகுந்த நேரத்தில் மிகவும் திறம்பட செயல்பட்டு உறுப்புகளை அனுப்பிவைத்தனர். உடல் உறுப்பு தானம் வழங்கிய சாந்தமணி குடும்பத்திற்கு கே.எம்.சி.எச். ஆஸ்பத்திரி தலைவர் நல்லா ஜி பழனிசாமி நன்றி தெரிவித்தார்.
Tags:    

Similar News