செய்திகள்
கோப்புப்படம்

ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல்

Published On 2019-12-10 04:59 GMT   |   Update On 2019-12-10 04:59 GMT
தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முதல் நாளில் 433 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முதல் நாளான நேற்று 433 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் நாளான நேற்று பலர் விண்ணப்பங்களை மட்டும் வாங்கிச் சென்றனர்.

தஞ்சாவூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3 பேரும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 2 பேரும், திருவையாறில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 8 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஒருவரும், பூதலூர் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 6 பேரும், திருவோணத்தில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

இதேபோல, கும்பகோணத்தில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 12 பேரும், திருப்பனந்தாளில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 6 பேரும், பாபநாசத்தில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 26 பேரும், அம்மாபேட்டையில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 2 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 4 பேரும், மதுக்கூரில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 3 பேரும், ஊராட்சி தலைவர் பதவிகளுக்கு 2 பேரும், பேராவூரணியில் வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 7 பேரும் என தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 76 பேரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 9 பேரும் என 85 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். மாவட்டத்தில் ஒன்றியக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு யாரும் வேட்புமனுக்களை வழங்கவில்லை. அதேபோல, ஒரத்தநாடு, திருவிடைமருதூர், பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களில் நேற்று ஒருவர் கூட வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

திருவாரூர் மாவட்டத்தில் 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 176 ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிகளுக்கு முத்துப்பேட்டை ஒன்றியத்தில் மட்டும் 2 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு குடவாசல், கொராடாச்சேரி ஒன்றியத்தில் தலா 2 பேர், திருத்துறைப்பூண்டியில் ஒருவர் என 5 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

அதேபோல திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 ஊராட்சிகளிலும் 3,180 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு நேற்று 129 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 18 மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு இதுவரை யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

நாகை மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு 6 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 205 பேரும் என மொத்தம் 212 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
Tags:    

Similar News