செய்திகள்
தங்கம்

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 224 குறைந்தது

Published On 2019-12-07 08:28 GMT   |   Update On 2019-12-07 08:28 GMT
சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.224 குறைந்து, ஒரு சவரன் ரூ.28,896-க்கு விற்பனையாகிறது.
சென்னை:

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது.

கடந்த 2-ந்தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 936 ஆக இருந்தது. அதை தொடர்ந்து விலை உயர்ந்தது.

நேற்று முன்தினம் ஒரு பவுன் ரூ.29 ஆயிரத்து 152 ஆக இருந்தது. நேற்று ரூ.32 குறைந்து பவுன் ரூ.29 ஆயிரத்து 120-க்கு விற்றது. இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.224 குறைந்தது.

ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்து 896 ஆக உள்ளது. கிராமுக்கு ரூ.28 குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.3,612-க்கு விற்கிறது.

இதன் மூலம் 4 நாட்களுக்கு பிறகு மீண்டும் தங்கம் விலை பவுன் ரூ.29 ஆயிரத்துக்கு கீழ் இறங்கியுள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு அதிகரிப்பு மற்றும் பங்கு சந்தையில் அதிக முதலீடு காரணமாக தங்கம் விலை சற்று குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.1,000 குறைந்துள்ளது. ஒரு கிலோ ரூ.46 ஆயிரத்து 600 ஆக உள்ளது. ஒரு கிராம் ரூ.46.60-க்கு விற்பனையாகிறது.
Tags:    

Similar News