செய்திகள்
தீப்பிடித்து எரிந்த அட்டை கம்பெனி

துடியலூர் அருகே அட்டை கம்பெனியில் தீ விபத்து

Published On 2019-12-07 05:33 GMT   |   Update On 2019-12-07 05:33 GMT
துடியலூர் அருகே அட்டை கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அடுத்துள்ள பன்னிமடை சஞ்சீவி நகர் பகுதியில் ஜனார்த்தனன் என்பவருக்கு சொந்தமான குடோன் உள்ளது.

இந்த குடோனில் அந்த பகுதியை சேர்ந்த பூபாலன்(45) என்பவர் அட்டை கம்பெனி வைத்து நடத்தி வந்தார். இங்கிருந்து பல்வேறு கம்பெனிகளுக்கு அட்டைகள் தயாரித்து விற்பனை செய்து வந்தார்.

குடோனில் அட்டை தயாரிப்பதற்காக மூலப்பொருட்கள், அட்டைகள், எந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. நேற்று பகல் முழுவதும் அந்த பகுதியில் மின் நிறுத்தம் என்பதால் பூபாலன் எந்திரத்தில் உள்ள பழுதை சரிபார்த்தார். அப்போது சுவிட்சை போட்டு விட்டு அப்படியே மாலையில் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

நள்ளிரவு 12 மணியளவில் இந்த குடோனில் இருந்து கரும்புகை வெளியேறியது. சிறிது நேரத்தில் தீ மளமளவெள கொழுந்து விட்டு எரிந்தது.

இதை பார்த்து அதிர்ச்சியான அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து கவுண்டம்பாளையம் கோவை வடக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பின் தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதில் குடோனில் அட்டை தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மூல பொருட்கள், தயாரிக்கப்பட்ட அட்டைகள், எந்திரங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின.

இதன் மதிப்பு ரூ.35 லட்சம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News