செய்திகள்
கோப்புப்படம்

அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2 ஆயிரம் புதிய பஸ்கள்

Published On 2019-11-28 07:09 GMT   |   Update On 2019-11-28 07:09 GMT
அரசு போக்குவரத்து கழகத்துக்கு 2000 புதிய பஸ்கள் இன்னும் மார்ச் மாதங்களுக்குள் வந்து சேர்ந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

அரசு போக்குவரத்து கழகங்களில் பழைய பஸ்களை மாற்றிவிட்டு 5 ஆயிரம் புதிய பஸ்களை விடுவதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2017-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி முதற்கட்டமாக 3 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டு அனைத்து மாவட்டங்களுக்கும் புதுப்புது பஸ்கள் விடப்பட்டது. இதைத் தொடர்ந்து மேலும் 2 ஆயிரம் பஸ்கள் வாங்கப்பட்டு விடப்பட்டது.

மின்சார பஸ்களும் சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டது. திருவான்மியூரில் இருந்து சென்ட்ரல் வரை இந்த பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மின்சார பஸ்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் மேலும் 535 மின்சார பஸ்களை வாங்குவதற்கு மாநகர போக்குவரத்து கழகம் டென்டர் கோரி உள்ளது. விரைவில் டெண்டர் முடிவாகி பஸ்கள் வாங்கப்பட உள்ளது.

அரசு போக்குவரத்து கழகத்துக்கு இந்த ஆண்டும் 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது அறிவித்தார். இதற்காக ரூ.630 கோடி நிதி ஒதுக்கப்பட்டது.

இதற்காக டெண்டரும் விடப்பட்டது. இதில் 1750 பஸ்களுக்கான டெண்டர் அசோக் லேலண்டு நிறுவனத்துக்கு கிடைத்துள்ளது. 250 பஸ்கள் டாடா நிறுவனத்துக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் நவீன வடிவமைப்புடன் பஸ்களை தயாரிக்க உள்ளதாக அசோக் லேலண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

2000 புதிய பஸ்கள் இன்னும் மார்ச் மாதங்களுக்குள் போக்குவரத்து கழகங்களுக்கு வந்து சேர்ந்து விடும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News