செய்திகள்
கோப்பு படம்.

நாராயணசாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

Published On 2019-11-27 12:43 GMT   |   Update On 2019-11-27 12:43 GMT
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் புதுவை முதல்- அமைச்சர் நாராயணசாமியை மு.க.ஸ்டாலின் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரித்தார்.
புதுச்சேரி:

புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமிக்கு நீண்ட காலமாக காலில் வலி இருந்து வந்தது. 

இதையடுத்து சென்னை வடபழனி சிம்ஸ் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற சென்றார். அவருக்கு ஆபரேசன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் கூறினார்கள். நேற்று முன்தினம் அவருக்கு ஆபரேசன் நடந்தது. அவர் சில நாட்கள் ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். 

அதன்படி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தார்.
Tags:    

Similar News