செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

ராமேசுவரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது - மதுரை ஐகோர்ட்டு

Published On 2019-11-26 03:14 GMT   |   Update On 2019-11-26 03:14 GMT
ராமேசுவரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று ஐகோர்ட் மதுரை கிளை தடை விதித்துள்ளது.
மதுரை:

ராமேசுவரத்தை சேர்ந்த ராமமூர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமேசுவரம் தீவு பகுதியில் வாழும் பெரும்பாலான மக்கள் மீன் பிடி தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். மேலும் புண்ணிய தலமாக உள்ள ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

மேலும் இங்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடமும் உள்ளது. தற்போது ராமேசுவரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க அரசு திட்டமிட்டுள்ளது. இது ராமேசுவரம் தீவு பகுதியில் நிலவும் அமைதியை சீர்குலைக்கும் வகையில் அமையும்.

எனவே ராமேசுவரத்தில் டாஸ்மாக் கடை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என அதிகாரிகளுக்கு மனு அனுப்பினோம். எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே ராமேசுவரம் தீவு பகுதியில் டாஸ்மாக் கடையை திறக்க தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது ராமேசுவரம் தீவில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Tags:    

Similar News