செய்திகள்
மணிமுத்தாறு அணை

நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2019-11-21 06:50 GMT   |   Update On 2019-11-21 06:50 GMT
தூத்துக்குடி மாவட்ட கடலோர பகுதிகளிலும், நெல்லை மாவட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
நெல்லை:

நெல்லை-தூத்துக்குடி மாவட்டங்களில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கடலோர பகுதிகளிலும், நெல்லை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் கனமழை பெய்தது.

நெல்லை மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 33 மில்லி மீட்டர் மழை பெய்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பகுதியான திருச்செந்தூரில் அதிகபட்சமாக 73 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

மழை காரணமாக பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 928 கன அடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 105 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் நேற்றைய விட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 133.75 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்றை விட ஒரு அடி உயர்ந்து இன்று காலை 147.64 அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 471 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 35 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 69.80 அடியாக உள்ளது. சிறிய அணைகளுக்கும் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. பெரும்பாலான சிறிய அணைகள் நிரம்பி விட்டதால் வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

குற்றாலத்தில் மழை காரணமாக சில நேரங்களில் அதிக அளவு தண்ணீர் கொட்டுகிறது. சில நேரம் மிதமான தண்ணீர் விழுகிறது. இதனால் போலீசார் அருவி பகுதியில் கண்காணித்து மிதமான தண்ணீர் விழும் போது சுற்றுலா பயணிகளை குளிக்க அனுமதிக்கிறார்கள். தண்ணீர் வெள்ளமாக விழும்போது குளிக்க தடை விதிக்கப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

தென்காசி-32, குண்டாறு-19, ராமநதி-14, பாபநாசம்-13, சேர்வ லாறு-10, ஆய்க்குடி-8.6, செங்கோட்டை-8, சிவகிரி-8, ராதாபுரம்-6.2, சங்கரன் கோவில்-6, மணிமுத்தாறு -5.2, கடனாநதி-5, களக்காடு-4.2, அடவிநயினார்-3, பாளை- 2.4, நெல்லை-2, சேரன் மகாதேவி-1.

Tags:    

Similar News