செய்திகள்
மேட்டூர் அணை

10-வது நாளாக மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக நீடிப்பு

Published On 2019-11-21 04:15 GMT   |   Update On 2019-11-21 04:15 GMT
மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக கடந்த 11-ந் தேதி உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. தற்போது வரை அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது.
மேட்டூர்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இதனால் மேட்டூர் அணை நடப்பாண்டில் 4-வது முறையாக கடந்த 11-ந் தேதி உச்ச நீர்மட்டமான 120 அடியை எட்டியது. தற்போது வரை அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடிக்கிறது. இதனால் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது.

மேட்டூர் அணைக்கு இன்று 8 ஆயிரத்து 143 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து காவிரியில் 7 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 900 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டுள்ளது

அணைக்கு வரும் தண்ணீரும், அணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீரும் சமமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் 10 நாட்களாக 120 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News