செய்திகள்
கோப்பு படம்

திருச்சி பல்கலைக்கழக மாணவி தற்கொலை முயற்சி - போலீசார் விசாரணை

Published On 2019-11-16 11:49 GMT   |   Update On 2019-11-16 11:49 GMT
பேராசிரியர் கண்டித்ததால் திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மாணவி தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் மண்ணியியல் (ஜியாலஜி) பிரிவில் 2ம் ஆண்டில் 26 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.இதில் 16 பேர் மாணவிகள் ஆவர். 13 பேர் மாணவர்கள் ஆவர்.

இங்கு ராமநாதபுரத்தை சேர்ந்த அந்தோணிசாமி என்பவரது மகள் ஜெனிபர் (வயது 19) என்பவர் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

திருச்சி காஜாமலையில் உள்ள பல்கலைக்கழக வளாக மாணவியர் விடுதியில் தங்கியிருந்து தினமும் வகுப்புக்கு சென்று வந்தார். நேற்று சகமாணவிகளிடம் உடல் நிலை சரியில்லை என்று கூறி, ஜெனிபர் வகுப்புக்கு செல்லவில்லை.மதியம் மாணவிகள் வகுப்பு முடிந்து விடுதிக்கு வந்தனர். ஜெனிபர் அறைக்கு சென்று பார்த்தபோது அவர் மயங்கிய நிலையில் கிடந்தார். இது குறித்து விடுதிவார்டன் சரோஜாவிற்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பிறகு ஜெனிபர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவர் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் பினாயிலை குடித்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

இது குறித்து கண்டோன் மெண்ட் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேத வள்ளி விசாரணை நடத்தி னார். அப்போது மாணவி ஜெனிபர் எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அதில் அந்த மாணவி தனது தோழிகள் சரோ, கஜா ஆகியோருக்கு எழுதியுள்ளார்.

கடிதத்தில் மாணவி ஜெனிபர் எழுதியிருந்ததாவது:-

என்னை மன்னித்து விடுங்கள். உங்களை விட்டு நான் போகிறேன். யாராலும் நமது ஹெச்.ஓ.டி. பேராசிரியரை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாது. சகமாணவர்களுடன் பேசுவது தவறா? அவர் தப்பா பேசுகிறார்.எனது நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நான் போன பிறகாவது ஹெச்.ஓ.டி. மாறுவாரா? என்று பார்க்கலாம். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் எழுதியிருந்தார்.

இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதாவது கடந்த மாதம் மண்ணியியல் தேர்வு நடந்துள்ளது. அந்த தேர்வின் வினாத்தாள் முன்னரே வெளியானதாக கூறப்படுகிறது. மாணவ-மாணவிகளின் செல்போன்கள் மூலம் அது பரவியதாக புகார் எழுந்தது.

இதனால் ஹெச்.ஓ.டி. சக்திவேல் மாணவ- மாணவிகளின் 29 செல்போன்களை வாங்கி ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. கடந்த4ந்தேதி இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதன் அடிப்படையில் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடந்துள்ளது. நேற்று முன்தினம் 6 மாணவர்களை அவர் விசாரித்துள்ளார்.

மாணவ-மாணவிகளின் செல்போன்களை ஆய்வு செய்த போது அவர்களின் தனிப்பட்ட படங்களை பார்த்து கேள்வி கேட்டதுடன், கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விசாரணைக்கு பயந்து ஜெனிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இது தொடர்பாக சக மாணவிகளும் மாணவ- மாணவிகளின் தனிப்பட்ட வி‌ஷயங்களில் தலையிட்டது தான் பிரச்சினையாகி விட்டது என தெரிவித்தனர். இது குறித்து பல்கலை கழக துணைவேந்தர் விசாரணை நடத்தியுள்ளார்.

மாணவ-மாணவிகளிடம் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
Tags:    

Similar News