செய்திகள்
சஸ்பெண்டு

அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியிடம் லஞ்சம் வாங்கிய 2 பெண் பணியாளர்கள் சஸ்பெண்டு

Published On 2019-11-13 04:51 GMT   |   Update On 2019-11-13 04:51 GMT
கோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளியிடம் லஞ்சம் வாங்கிய 2 பெண் பணியாளர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.

கோவை:

கோவை புளியகுளம் அருகே உள்ள அம்மன் குளத்தைச் சேர்ந்தவர் ஆண்டனி (வயது 65). கட்டிட தொழிலாளி இவருக்கு கடந்த மாதம் திடீரென மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அவரது உறவினர்கள் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வந்தனர். டாக்டர்கள்ஆண்டனியை பரிசோதனை செய்த போது அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவரது உறவினர்கள் ஆண்டனியை மேல் சிகிச்சைக்காக கடந்த மாதம் 31-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை டாக்டர்கள் நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் டாக்டர்கள் ஆண்டனியின் தலையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் பரிசோதனை எடுக்க அறிவுறுத்தினர். இதனையடுத்து ஆண்டனியை அவரது உறவினர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்க அழைத்து சென்றனர்.

ஆனால் பல்வேறு காரணங்களை கூறி அவருக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கவில்லை. மேலும் ஸ்கேன் எடுக்க ஸ்ட்ரெச்சரில் கொண்டு செல்ல அங்கு இருந்த ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்க்கும் 2 பேர் ஆண்டனி மற்றும் அவருடைய உறவினர்களிடம் பலமுறை ரூ.100 லஞ்சம் பெற்று உள்ளனர்.

இந்த நிலையில் ஆண்டனியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் கடந்த 12 நாட்களுக்கு மேலாகியும் முறையான சிகிச்சை அளிக்கவில்லை எனவும், ஸ்கேன் எடுக்க முடியவில்லை எனவும், ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதாகவும் ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.புகாரை தொடர்ந்து உடனடியாக ஆண்டனிக்கு சிகிச்சை அளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சட கோபன் உறுதி அளித்தார்.

மேலும் ஆண்டனி மற்றும் அவரது உறவினரிடம் லஞ்சம் வாங்கியது குறித்து கண்காணிப்பாளர் சடகோபன் விசாரணை நடத்தி ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பணியாளர்களான தாமரை (38) ராசாத்தி (30) ஆகியோரை சஸ்பெண்டு செய்து ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் சடகோபன் உத்தர விட்டார். இதற்கான நகலை டீன் அசோகனுக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News