செய்திகள்
எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சி தேர்தல் - ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

Published On 2019-11-12 06:07 GMT   |   Update On 2019-11-12 06:07 GMT
உள்ளாட்சி தேர்தல் குறித்து ஓமலூரில் கட்சி நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
சேலம்:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அங்கிருந்து கார் மூலம் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார்.

அவருக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சியினர் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து வீரபாண்டி சட்டமன்ற உறுப்பினர் பி.மனோன்மணி இல்ல திருமண விழாவில் முதல்-அமைச்சர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

இன்று (12-ந் தேதி) காலையில் சேலம்-பெங்களூரு பை-பாஸ் சாலையில் ஓமலூரில் உள்ள சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. கட்சி அலுவலகத்திற்கு எடப்பாடி பழனிசாமி சென்றார்.

பின்னர் அவர் சேலம் மாநகர் மாவட்டம், புறநகர் மாவட்ட கட்சி நிர்வாகிகளுடன் உள்ளாட்சி தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு என்னென்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை வழங்கிய அவர் உள்ளாட்சி தேர்தலுக்கான வியூகங்கள் குறித்தும் விரிவாக கட்சியினருக்கு விளக்கினார்.

இதையடுத்து 11.45 மணிக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

Tags:    

Similar News