செய்திகள்
கோவை பெண் வித்யா பிரபாவை ஜெர்மனி வாலிபர் மைக்கேல் ஷீல்டஸ் தமிழ் கலாசாரப்படி மணந்தார்.

தமிழ் கலாசாரப்படி கோவை பெண்ணை மணந்த ஜெர்மனி வாலிபர்

Published On 2019-11-11 05:54 GMT   |   Update On 2019-11-11 05:54 GMT
கோவை வெள்ளகிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கோவையை சேர்ந்த பெண்ணை தமிழ் கலாசாரப்படி ஜெர்மனி வாலிபர் திருமணம் செய்துகொண்டார்.
கவுண்டம்பாளையம்:

கோவை துடியலூர் அருகிலுள்ள பன்னிமடையை சேர்ந்த சுப்பிரமணியம்- கலாவதி ஆகியோரின் மகள் வித்யபிரபா (வயது 28). கோவையில் கம்ப்யூட்டர் படித்துவிட்டு ஜெர்மனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஷீல்டஸ் என்பவரின் மகன் மைக்கேல் ஷீல்டஸ் (வயது 29). இவரும் அதே கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது இவர்கள் இருவருக்குமிடையே அறிமுகமாகி நட்பு மலர்ந்தது. அந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இந்நிலையில் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதையடுத்து இருவரும் தங்கள் பெற்றோர்களிடம் பேசி சம்மதம் பெற்றனர். மைக்கேல் ஷீல்டஸ் மற்றும் வித்யபிரபா ஆகியோருக்கு கோவை வெள்ளகிணர் பிரிவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் கலாசாரப்படி திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது மைக்கேல் ஷீல்டஸ் பெற்றோர் வரமுடியாததால் வித்யபிரபாவின் தாய் மாமா கனகராஜ்-பார்வதி ஆகியோர் மணமகனின் பெற்றோராக இருந்து சடங்குகளைச் செய்தனர். பாதபூஜை செய்தல், மலர் வாழ்த்துதல், மாலை மாத்துதல் உள்ளிட்ட சடங்குகள் நடைபெற்றன. இந்த திருமணத்திற்கு ஜெர்மனியில் இருந்து மைக்கேல் ஷீல்டசின் உறவினர்கள், நண்பர்கள் கலந்து கொண்டனர்.

அவர்களும் தமிழ் பாரம்பரிய உடை அணிந்து விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்தனர்.
Tags:    

Similar News