செய்திகள்
சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

Published On 2019-11-08 10:41 GMT   |   Update On 2019-11-08 10:41 GMT
திருவாரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர்:

திருவாரூர் தெற்குவீதியில் உள்ள டவுன் போலீஸ் நிலையம் அருகில் சார் பதிவாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் சார் பதிவாளராக பாலாஜி மற்றும் அலுவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

மாவட்ட தலைநகரில் சார்பதிவார் அலுவலகம் இருப்பதால் எப்போதும் பரபரப்பாக மக்கள் கூட்டம் இருக்கும்.

இந்த நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. மனோகரன் தலைமையில் ஆய்வாளர்கள் இமயவர்மன், தமிழ்செல்வி உள்பட 8 பேர் போலீசார் வாகனங்களில் வந்தனர்.

போலீசார் அதிரடியாக சார் பதிவாளர் அலுவலகத்துக்குள் புகுந்து அலுவலக கதவை இழுத்து சாத்தினர். அதனை தொடர்ந்து அங்கிருந்த ஆவணங்கள், பத்திரங்கள், பதிவு கட்டணமாக பெற வேண்டிய வரை வோலையை சோதனை செய்தனர்.

அப்போது பத்திரப்பதிவு அதிகாரியிடம் பதிவு விவரங்கள் குறித்து விசாரணை நடத்தினர். ஆனால் அலுவலகத்தில் உரிய கணக்கில் வராத சுமார் ரூ.22 ஆயிரத்து 600 பணம் இருந்துள்ளது.

மேலும் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.

இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அதிரடி சோதனை இரவு 8 மணி தொடங்கி இன்று அதிகாலை 3 மணி வரை நடைபெற்றது.

சோதனை முடிவில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து 22 ஆயிரத்து 600 பணத்தையும் முக்கிய ஆவணங்களையும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைப்பற்றி சென்றனர்.

Tags:    

Similar News